நடிகை சாக்ஷி உருக்கம்

நடிகை சாக்ஷி உருக்கம்க‌டந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற 17 போட்டியாளர்களில் நடிகை சாக்ஷி அகர்வாலும் ஒருவர். இந்நிகழ்ச்சிக்கு முன்பு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாகவே பிரபலமானவர். இந்த கொரோனா காலத்தில் டிவிட்டரில் உருக்கமான வேண்டுகோளையும் வைத்துள்ளார். 


அந்த டவிட்டர் பதிவில் நடிகை சாக்ஷி, தனது பழைய புகைப்படத்துடன் தற்போதைய் புது ஒளிப்படத்தையும் இணைத்து பகிர்ந்து கூடவே அதில் முக்கிய தகவல் ஒன்றையும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். 


அதில், நான் பள்ளியில் இருந்து எம்.பி.ஏ படிக்கும் வரையில் நான் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். அதனால் என்னை குண்டு பூசணிக்காய் என்று பலர் அழைத்தனர். ஆனால்  அவர்கள் என்னை இவ்வாறு கேலிசெய்வதை அதை நான் கண்டு கொள்ளவேயில்லை. அதற்கு பதில் அவர்களுக்கு நன்றியே சொல்கிறேன். நம் உருவத்தைப் பார்த்து கிண்டல் , கேலி செய்பவர்களை நாம் ஒருபோதும் கண்டுகொள்ளக் கூடாது என்று உருக்கமான பதிவிட்டதுடன் ரசிகர்களுக்கு இதில் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.


#சாக்ஷி, #சாக்ஷி_அகர்வால், #நடிகை, #பிக்பாஸ், #விதை2விருட்சம், #actress_sakshi_agarwal, #actress, #sakshi, #agarwal, #Biggboss, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,