நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் - பேபி அனிகா 

நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் - பேபி அனிகா க‌டந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான‌ என்னை அறிந்தால் என்ற‌ திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் மகளாகவும், திரிஷாவின் மரணத்திற்குப்பிறகு நடிகர் அஜித்தின் வளர்ப்பு மகளாகவும் நடித்தவர்தான் பேபி அனிகா ஆவார். இந்த திரைப்படத்தை இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்த்தில் அஜித் அனிகா தந்தை மகள் காம்பினேஷன் அனைவராலும் ரசிக்கப்பட்டதால் இதே தந்தை மகளாக அஜித்தும், அனிகாவும் விஸ்வாசம் என்ற‌ படத்திலும் நடித்தனர். இந்தபடமும் இமாலய வெற்றி பெற்றது. வசூலில் பட்டையக் கிளப்பியது. 


இந்நிலையில் தற்போது பேபி அனிகாவிற்கு ஹீரோயினாக நடிக்க ஆசை வந்திருக்கிறது போல... அதனால்தானோ ஏனோ அவர் ஹீரோயினுக்கு இணையாக போட்டோஹூட் நடத்தி வந்தார். இவரது ஒளிப்படங்கள் சமூக வலைதங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து  மலையாள திரைப்படம் ஒன்றில் பேபி அனிகா ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் செய்திகள் வெளியாகிறது. இதனால் இனி நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று தனது பெற்றோரிடத்தில் சொல்லி வருகிறாராம் நடிகை அனிகா. 


#அனிகா, #விஸ்வாசம், #என்னை_அறிந்தால், #அஜித், #ஹீரோயின், #கதாநாயகி, #விதை2விருட்சம், #actress, #anika, #Viswasam, #movie, #Ennai_Arindhal, #Ajith, #Heroine, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree