ஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

ஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைஎன்ன இது, கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியை இங்கே குறிப்பிட்டிருக்கே, அப்படி என்ன பெரிசா சொல்லப் போறீங்க‌ என்ற ஐயத்தோடு, எனது கட்டுரையை படிக்கத் தொடங்கியிருக்கும் உங்களை அன்புடன் வரவேற்பதில் உங்கள் அன்பு நண்பன் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி ஆகிய நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 


எனது கட்டுரையை முழுவதுமாக படிக்காத சிலரது விமர்சனங்களுக்கு நானும் விதிவிலக்கு அல்ல என்பதை அறிந்தே இதனை இங்கு பகிர்கிறேன். 


ஒருவர், ஒரு கருத்தைச் சொல்லும் போது அவர்கள் அந்த கருத்தைச் சொல்லும் போது உச்சரிக்கும் வார்த்தைகளை முழுவதுமாக கேட்டு உள்வாங்கியும், அதிலுள்ள அந்த கருத்தை முழுவதுமாக உணர்ந்து உள்வாங்கிக் கொண்டும், அந்த கருத்தினை, அந்த வார்த்தைகளை, எந்த இடத்தில் எதற்காக சொன்னார்கள் என்பதை பகுத்தறியும் சிந்தனையோடு தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டு, அதன்பிறகு அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளில் அல்லது கருத்தில் ஏதாவது உங்களுக்கு மாறுபட்ட கருத்தோ அல்லது ஆட்சேபனையோ இருந்தால், தகுந்த ஆதாரங்களை காட்டி, அதனை மிகவும் நாகரீகமாக சொல்லி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். 


ஒரு வேளை அவர்கள் சொன்ன கருத்தில் உண்மையிலேயே தவறு இருந்தால் அதனை உணர்ந்து அவற்றை சரிசெய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும். 


அதனை விடுத்து, அவர் அந்த கருத்தினை முழுமையாக அறிந்து உள்வாங்காமல்  அவசரப்பட்டு அரைவேக்காட்டுத் தனமாக‌ அந்த கருத்தினை தெரிவித்தவரையும், அவர்களின் குடும்பத்தினரையும் மிகவும் மோசமாகவும், கீழ்த்தரமாகவும், பண்பாடற்ற முறையிலும், மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சிப்பது என்பது கேவலத்தின் உச்சம். இது விமர்சிப்பவர்களின் கீழ்த்தரமான குணத்தையே காட்டுவதாக அமைந்து விடும். 


இன்னும் சொல்லப்போனால் ஒரு குழந்தை, தான் கழித்த மலத்தையே தனது கையால் எடுத்து முகம் முழுக்க பூசிக்கொள்ளும், அந்த குழந்தைக்கு மலம் எது, சந்தனம் எது என்று பகுத்தறியும் திறன் இல்லை அதுபோலவேதான் ஒருவரின் கருத்தினை விமர்சிப்பவரும் என் கண்களுக்கு... தன் மலத்தை தனது கைகளால் எடுத்து, தனது முகத்தில் பூசிக்க்கொள்ளும் அந்த குழந்தையை போன்றே கருத்தினை விமர்சிப்பவர்கள் தெரிகிறார்கள் என்பது ஆணித்தரமான உண்மை. 


இதற்கு ஓர் உதாரணமாக


கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற இந்த பழமொழியின் பொருள்  பல காலமாக எதிர்மறையாகவே பொருள் கொள்ளப்பட்டு வந்தது. 


இந்த பழமொழியின் உண்மையான வரி என்ன தெரியுமா?


கழு, தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை அதாவது கழு என்ற புல்லை பதப்படுத்தி பாய் தைக்கும்போது அந்த புல்லில் இருந்து கற்பூர வாசனை வீசுவது நமது மூக்குக்கு தெரியும் என்பதுதான். 


இந்த அழகான பழமொழியை யாரோ ஒருவர் தவறாக உச்சரித்ததன் விளைவாக, அவரது தலைமுறை மட்டுமல்ல தமிழர்கள் அனைவருமே இதனை தவறாக உச்சரித்தும், தவறான பொருளை உணர்ந்து, அதையே நமது அடுத்த தலைமுறைக்கும் சொல்லிக் கொடுத்து அவர்களும் அந்த தவறையே செய்யச் சொல்லும் துர்பாக்கியம் நிலைக்கு நாம் ஆளாகியிருப்பது வேதனை தரும் விஷயம். 


ஜோதிகா அவர்கள், தஞ்சை பெரிய கோயிலைப் பார்த்து விட்டு, அந்த கோயிலைப் போலவே சுத்தமாகவும், சுகாதாரமாக, அதன் அருகில் உள்ள அரசு மருத்துவ மனையையும் பராமரிக்க வேண்டும் என்றுதான் சொல்லியுள்ளார். ஆங்கிலத்தில் அவர் அதனை சொல்லியுள்ளார். அவர்களின் கருத்தினை விமர்சிப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் மீண்டும் ஒருமுறை அவரது பேச்சை கேளுங்கள். அல்லது ஆங்கிலம் தெரியவில்லை என்றால், ஆங்கிலம் தெரிந்தவர் களிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும். மேலும் ஜோதிகாவின் கருத்தில் நியாயம் உள்ளது என்றும் அவரது கணவர் சூர்யா அவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது) 


ஆலயம் எவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்து வருகி றோமோ அதைப்போன்றே மருத்துவமனைகளையும் பள்ளிகளையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்துவர வேண்டும் என்ற நடிகை ஜோதிகாவின் கருத்து 100க்கு100 விழுக்காடு சரியானதே என்பதே என் தனிப்பட்ட கருத்து. 


புரியாமலும், தெரியாமலும், அறியாமலும் நடிகை ஜோதிகாவை விமர்சித்தால், மேற்சொன்ன கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியே அதற்கு சாட்சியாக இருக்கும். புரிந்தும் தெரிந்தும் அவர்கள் ஜோதிகாவை விமர்சித்தால் அவர்களுக்கு விளக்கம் கொடுப்பதை விட நமக்கு ஆயிரம் வேலைகள் இருக்கு அதில் நமது முழுக்கவனம் செலுத்தி நமது வாழ்க்கையை நாம் பார்ப்போம். 


இதைப் புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள், புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொண்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 


=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 


#ஜோதிகா, #சூர்யா, #தஞ்சை_பெரிய_கோயில், #சர்ச்சை, #பிரகதீஸ்வரர்_ஆலையம், #மருத்துவமனை, #கழுதைக்கு_தெரியுமா_கற்பூர_வாசனை, #பழமொழி, #கருத்து, #விமர்சனம், #விதை2விருட்சம், #Jodhika, #Surya, #Tanjore_Big_Temple, #controversy, #Brahadeshwara_temple, #hospital, #Jyothika, #Soorya, #actress, #actor, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, 70mmstoryreel