பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க 

பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க பருவநிலை மாற்றங்களாலும், கண்ட கண்ட ரசாயண க்ரீம்களாலும், அலங்கார உணவுகளை உட்கொள்வதாலும் பெண்களின் இயற்கையான முக அழகு மற்றும் இயற்கையான உடல் அழகு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடுகிறது. இதன்காரணமாக மேக்கப் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி தங்களை அழகாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் தங்களின் இயற்கையான அழகை முற்றிலுமாக இழக்க நேரிடும் 


ஆகவே உண்ணும்போது ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். தங்களை அழகு படுத்திக் கொள்ளும் போது இயற்கையான பொருட்களை கொண்டு தங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது பருவ நிலைக்கு ஏற்பட உடைகளை அணியத் தொடங்க வேண்டும். இதன் காரணமாக கிட்டத்தட்ட 50 சத‌வீதம் இழந்த இயற்கையான அழகு திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 


மீதமுள்ள‌ 50 சதவீதம் முக மற்றும் உடல் அழகினை திரும்ப பெறுவது எப்படி என்று இங்கு சுருக்கமாக காண்போம். பெண்களின் உடல் அழகுக்கு... கஸ்தூரி மஞ்சள் கிழங்கை நன்றாக‌ பொடித்து, அதனை உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளிக்க வேண்டும். மேலும் கஸ்தூரி மஞ்சள் தூளை எடுத்தும் முகத்தில் தேய்த்து குளித்து வந்தால்  முகத்தில் ஏற்படும்  முகப்பரு, கட்டிகள், சரும பிரச்சனைகள், கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்ற எல்லாமே மறைந்து இழந்த இயற்கையான அழகு திரும்ப பெற்று மற்ற பெண்களை பொறாமை கொள்ளும் பேரழகை பெறலாம். 
 


#கஸ்தூரி_மஞ்சள், #தூள், #மஞ்சள்_கிழங்கு, #மஞ்சள், #சருமம், #முகம், #அழகு, #முகப்பரு, #கட்டிகள், #கருவளையம், #விதை2விருட்சம், #Kasthuri_Turmeric, #powder, #Turmeric, #Yellow, #Skin, #Face, #Beauty, #Pimples, #Tumors, #Black_Circle, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க ,