படப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ் 

படப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்


 


கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள திரைப்படம்தான் பெண்குயின், இந்த திரைப்படத்தில் நடிகை கீரத்தி சுரேஷ் நடித்துள்ளார்.  இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக சார்லி சாப்ளின் போல் வேடமிட்ட ஒருவர் கொலைகள் செய்வது போல் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். 


இந்த காட்சி குறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, சார்லி சாப்ளின் என்று சொன்னவுடன் அனைவருக்கும் சிரிப்பு காமெடி தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் இந்த படத்தில் சார்லி சாப்ளின் பார்த்தால்பயம் வரும். அதுதான் இந்தப் படத்தில் இருக்கும் பெரிய மாற்றம்.  படப்பிடிப்பில் நானே அந்த கதாபாத்திரத்தை பார்த்து பயந்து அலறி விட்டேன். சிரிக்க வைத்தவரை பார்த்து பயப்பட வைத்து விட்டார்கள். இந்த கதாபாத்திரம் உங்களை நிச்சயமாக கவரும்' என்றார்.


இத்திரைப்படம் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஜூன் மாதம் 19-ந் தேதி அதாவது நாளை மறுநாள் நேரடியாக ரிலீசாக இருக்கிறது. 


#கீர்த்தி_சுரேஷ், #பெண்குயின், #Keerthy_suresh, #Penguin, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,