தேங்காய் எண்ணெய்யை பற்கள் ஈறுகள் மீது தடவி வந்தால்

தேங்காய் எண்ணெய்யை பற்கள் ஈறுகள் மீது தடவி வந்தால்சிலருக்கு மட்டுமே பற்கள் வெண்மையாக பளிச்சிடும். பலருக்கு பற்களின் நிறம் மாறியிருக்கும். பற்களின் நிறங்கள் மொத்தம் 24 நிறங்க‌ள் உண்டு அதாவது வெண்மையில் தொடங்கி அடர்த்தி குறைந்த மஞ்சள் நிறம் பழுப்பு நிறமாக‌ மாறிக் கொண்டே வந்து அடர்த்தியான மஞ்சள்நிறம் கலந்த பழுப்பு நிறம் வரை  என்பார்கள். இந்த பற்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து பற்கள் வெண்மையாக பளிச்சிட இதோ ஓர் எளிய குறிப்பு


காலையில் தூங்கி எழுந்தவுடனோ அல்லது இரவு படுக்கச் செல்லும் போதோ பற்களை நன்றாக தேய்த்து விட்டு வாயை கொப்பளித்து விட்டு, சில நிமிடங்கள் கழித்து தேங்காய் எண்ணெய் சிறிது உள்ளங்கையில் ஊற்றி, அதில் உங்கள் ஆள்காட்டி விரலை நனைத்து உங்கள் பற்கள் மீதும் ஈறுகள் மீதும் தினந்தோறும் தடவி வந்தால், ஓரிரு வாரங்களிலே உங்கள் பற்கள் வெண்மையாக பளிச்சிடுவதை நீங்களே காணலாம்.  மேலும் இன்னும் விரைவாக பற்கள் பளிச்சிட வேண்டுமானால் சமையலுக்கு பயன்படுத்தும் பேக்கிங் சோடா சிறிதளவு கலந்து தடவி வந்தாலும் பலன் கிட்டும் என்கிறார்கள் அனுபவசாலிகள். 


#தேங்காய்_எண்ணெய், #தேங்காய், #எண்ணெய், #பல், #பற்கள், #ஈறு, #ஈறுகள், #வெண்மை, #பளிச்சிட, #விதை2விருட்சம், #Coconut_Oil, #Coconut, #Oil, #Tooth, #Teeth, #Gums, #Whiteness, #Glitter, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,