பேய் வேடத்தில் ராசி கண்ணா மிரட்டும்  ஹாரர் - த்ரில்லர் படம்

பேய் வேடத்தில் ராசி கண்ணா மிரட்டும்  ஹாரர் - த்ரில்லர் படம்பாடலாசிரியரும் இயக்குநருமான‌ பா.விஜய் தற்போது நடிகர் அர்ஜூன் மற்றும் ஜீவா ஆகிய இருவரையும் இணைத்து வைத்து 'மேதாவிய என்ற பெயரில் புதிய திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு ள்ளார். இத்திரைப்படம் பற்றி அவர் கூறியதாவது:  


ஊரடங்கு ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே படத்தோட கதையை அர்ஜூன், ஜீவாகிட்ட சொல்லிட்டேன். ரெண்டு பேருக்கும் கதை பிடிச்சிருச்சு. ஹாரர் - த்ரில்லர் ஜானர்ல படத்தோட கதை தயாராகி யிருக்கு. அர்ஜூன் சாருக்கு இதுதான் முதல் பேய் படமா இருக்கும். படத்துல ரெண்டு ஹீரோயின் இருக்காங்க. ராசி கண்ணா மட்டும்தான் ஜீவாவுக்கு ஹீரோயினா கமிட்டாகியிருக்காங்க. இன்னும் அர்ஜூன் சாருக்கு முடிவாகலை. தேடிட்டே இருக்கோம். கொஞ்ச நாள்ல அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்.


இசையமைப்பாளரா யுவன் கமிட்டாகியிருக்கார். பெரிய பட்ஜெட்ல இந்தப் படம் உருவாகும். என்னோட டைரக்‌ஷன் வேலையை ரொம்ப நேர்த்தியா பண்ணணும்னு வேலை பார்த்திட்டிருக்கேன். கண்டிப்பா அடுத்த வருஷம் படம் ரிலீசாகி விடும்'' இவ்வாறு அவர் கூறினார்.


பாடலாசிரியரும், இயக்குநருமான பா. விஜய் ஏற்கனவே `ஸ்ட்ராபெரி', `ஆருத்ரா' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்க‍து. 


#ஜீவா, #ராசி_கண்ணா, #அர்ஜூன், #மேதாவி, #Jiiva, #Methavi, #Rashi_khanna, #Arjun, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,