உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலிசெய்யா விட்டால் 

உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலிசெய்யா விட்டால்



சொந்தவீடு என்பது அனைவருக்கும் சாத்தியமாகாத ஒன்று. சொந்த வீடு இல்லாதவர்கள், வாடகைக்கு வீடு பிடித்து குடியேறலாம். பல நேரங்களில் வாடகைக்கு வருபவர்கள், வீட்டின் உரிமையாளர் சில காரணங்களுக்கு, வாடகை ஒப்பந்தக் காலம் முடிந்த பிறகு, வாடகைதாரரை வீட்டை காலிசெய்யச் சொன்னால் அந்த வாடகைதாரர் வீட்டை காலிசெய்ய மறுத்து, தொடர்ந்து அதே வீட்டில் குடியிருந்து கொண்டு வீட்டு உரிமையாளருக்கோ அல்லது அங்குள்ள பிற வாடகைதாரர்களுக்கோ தொல்லைகள் கொடுத்துக் கொண்டு இருப்பார். இந்த பிரச்சினையை போக்குவதற்காக உரிய தீர்வினை மத்திய அரசின் புதிய மாதிரி வாடகை ஒப்பந்த சட்டம் (New Model Tenancy Act) வழிவகை செய்துள்ளது. விரைவில் இச்சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்  சட்டப்படி வாடகையை அதிகரிக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதாவது, வாடகை ஒப்பந்தம் முடிந்த பிறகும் வாடகைதாரர் வீட்டை காலி செய்ய மறுத்தால் அந்த வாடகைதாரருக்கு தற்போதையை வாடகைத் தொகையில் இருந்து கூடுதலாக முதலிரண்டு 2 மாதங்கள் வரை 2 மடங்கும், அதன்பிறகும் காலி செய்ய மறுத்து விட்டால் 4 மடங்கு வரையும் வாடகையை வசூலிக்கும் உரிமையை  உரிமையாளருக்கு வழங்கியுள்ளது. அதன் பிறகும் அவர்கள் காலிசெய்ய‍ மறுத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். 


=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி - 98841 93081


#வாடகை, #வாடகை_ஒப்பந்தம், #உரிமையாளர், #சொந்தக்காரர், #காலிசெய்ய, #மாதிரி_வாடகை_ஒப்பந்தச்_சட்டம், #முன்தொகை, #குத்தகை, #விதை2விருட்சம், #New_Model_Tenancy_Act, #Rental, #Rental_Agreement, #Owner, #vacate, #Sample_Rental_Contract_Act, #Advance, #Lease, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,