ந‌யன்தாராவை பற்றி பற்றி கமெண்ட் செய்ய தைரியம் இருக்கா? - நடிகை ஸ்ரீரெட்டி

ந‌யன்தாராவை பற்றி பற்றி கமெண்ட் செய்ய தைரியம் இருக்கா? - நடிகை ஸ்ரீரெட்டிக‌டந்தாண்டு முதல் திரைத்துறையில் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளின் நாயகியாக இருந்து வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவருக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல சினிமா நட்சத்திரங்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழி சினிமா நட்சத்திரங்கள் பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக பல பிரமுகர்களின் பெயர்களை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் புகார் கூறினார்.


இந்நிலையில் சமூக வலைத்தளங்களில்  தன்னை பற்றி விமர்சிப்பவர் களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் தெரிவித்த கருத்து புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. அது என்னவென்றால்  "இது என் உடல்.. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஏன் இங்கு வந்து கமெண்ட் செய்கிறீர்கள்'  "எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் பாய்பிரென்ட் டை மாற்றிக் கொண்டு தான் இருப்பேன். என்றதோடு நிற்காமல் "இதையே பெரிய ஹீரோயின்கள் பற்றி கமெண்ட் செய்வீர்களா? நயன்தாரா கூட தான் திருமணம் ஆன ஆண்கள், ஆகாத ஆண்கள் என பலருடன் காதலில் இருந்தார். அவரை பற்றி கமெண்ட் செய்ய உன‌க்கு தைரியம் இருக்கா?. ஒரு ஸ்டார் ஹீரோயினுக்கும், வாய்ப்பு இல்லாமல் போராடும் நடிகைக்கும் இதுதான் வித்தியாசம்," என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.


சும்மா போன ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்ட கதைபோல், சும்மா இருந்த நயன்தாராவை இப்படி வெளிப்படையாக ஸ்ரீரெட்டி வம்புக்கு இழுத்திருப்பதால்  அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். 


#ஸ்ரீரெட்டி, #நயன்தாரா, #Sri_Reddy, #Nayanthara, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,