கொரோனா எதிரொலி - பிரபல நடிகர்களிடம் தமிழ் நடிகை கெஞ்சல் 

கொரோனா எதிரொலி - பிரபல நடிகர்களிடம் தமிழ் நடிகை கெஞ்சல் உலகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய நோய் தனது கோரக்கரங்களால் பல உயிர்களை பலிவாங்கி வருகிறது. மேலும் பல உயிர்களை பலி வாங்க காத்து இருக்கிறது. இந்நோயினால் பெரும்பாலான உலக நாடுகளில் ஊரடங்கு உத்த‍ரவு 144 போடப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 


இந்த கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் விதமாக 144 ஊரடங்கு தடை பிறிப்பிக்கப் பட்டதன் காரணமாக திரையுலகம் முடங்கி உள்ளது. அனைத்து சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் வேலை இழந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு ஃபெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. இதுபோல் நடிகர் சங்கத்தில் உள்ள துணை நடிகர்-நடிகைகள், நாடக நடிகர்களுக்கு உதவவும் நிதி வசூலிக்கப்படுகிறது. 


இதுவரை 
தல அஜித் - ரூ.25 லட்சம்
ஐசரி கணேஷ் - ரூ.10 லட்சம் 
கார்த்தி - ரூ.2 லட்சம்
நகைச்சுவை நடிகர் சூரி - ரூ.1 லட்சம் 
நாசர் - ரூ.50 ஆயிரம்
எஸ்.ஜே.சூர்யா - ரூ.50 ஆயிரம்
பொன்வண்ணன் - ரூ.25 ஆயிரம்
சாய்பிரதீப் - ரூ.25 ஆயிரம் 
சங்கீதா - ரூ.15 ஆயிரம் 
பூச்சி முருகன் - ரூ.10 ஆயிரம்
கோவை சரளா -  ரூ.10 ஆயிரம்
சத்யபிரியா -  ரூ.10 ஆயிரம்
ரோகிணி -  ரூ.10 ஆயிரம்
லதா -  ரூ.10 ஆயிரம்
சச்சு -  ரூ.10 ஆயிரம்
நாகிநீடு -  ரூ.10 ஆயிரம்
பிரபா ரமேஷ் -  ரூ.10 ஆயிரம்
சேலம் பார்த்திபன் -  ரூ.10 ஆயிரம்


ஆக இதுவரை மொத்தம் ரூ.40,65,100 -


(ரூபாய் நாற்பது லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து நூறு வரை வசூலாகி உள்ளது.


இந்நிலையில் பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பதிவில்,  "நடிகர் சங்கம் தற்போது கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறது. ரஜினி, கமல், அஜித், விஜய் நீங்கள் நால்வர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன், தயவு செய்து, உங்களால் முடிந்த உதவியை நடிகர் சங்க அறக்கட்டளைக்கு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.


#ajith, #vijay, #kamal, #rajini, #kutty_padmini, #ரஜினி, #கமல், #அஜித், #விஜய், #குட்டி_பத்மினி, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,