தூங்கும்போது தலைமுடி கவனம்
ஆணோ பெண்ணோ இதில் யாராக இருந்தாலும் சரி, அவர்களின் அழகை அள்ளித் தருவது அவர்களின் தலைமுடிதான். குறிப்பாக பெண்களின் தலைமுடியை அதாவது கூந்தலை கார்மேகத்துடன் ஒப்பிட்டு சொலவார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலைமுடியை ஒழுங்காக பராமரித்து வர வேண்டியது அவசியத்திலும் அவசியமே.
குறிப்பாக தூங்கச் செல்லும்போது, தலைமுடி ஈரமாக இருந்தாலும் நாளடைவில் தலைமுடியில் அதாவது கூந்தலில் பிசுபிசுப்பு தன்மை ஏற்பட்டு மயிர்க்கால்களுக்கு அதீத பாதிப்பை ஏற்படுத்தி, கூந்தலின் வளர்ச்சி, கவர்ச்சி, அடர்த்தி இவை மூன்றுக்கும் வேட்டு வைத்தது போல் ஆகிவிடும் அதுவும் சொந்தக் காசில்.
அடுத்த்தாக தலைமுடியை அதாவது கூந்தலை இறுக்கிக் கட்டிக்கொண்டு தூங்கினால் அது கூந்தலின் அடர்த்தி, கவர்ச்சி, வளர்ச்சி இவைகள் பாதித்து கூந்தலின் அழகு சீர்கெட்டுவிடும். குறிப்பாக நீளமான கூந்தல் உள்ளவர்கள் தலை முடியை தளர்த்தி கட்டிக்கொள்வது நல்லது என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள்.
#தூக்கம், #உறக்கம், #தூங்கும்போது_தலைமுடி_கவனம், #வளர்ச்சி, #கவர்ச்சி, #அடர்த்தி, #முடி, #கேசம், #கூந்தல், #தலைமுடி, #மயிர், #விதை2விருட்சம், #Sleep, Hair_Care_While_Sleep, #Growth, #Sexy, #Density, #Hair, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,