இளம்பெண்களே - கிளென்சிங் செய்யாமல் விட்டால் உங்க முகத்தில்

இளம்பெண்களே - கிளென்சிங் செய்யாமல் விட்டால் உங்க முகத்தில்ந‌மது அழகை குறிப்பாக பெண்களின் முக,  அழகை கெடுப்பது, வறட்சி அல்லது எண்ணெய் பசை,  கரும்புள்ளி, பருக்கள்  மற்றும் சுருக்கங்கள் போன்றவை பெரும் பாலான காரணிகளாக அழகியல் நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளன• 


ஆகவே பெண்களே நீங்கள் உங்கள் முக‌த்தை சரியான தருணத்தில் சரியான அளவில் கிளென்சிங் (clenzing) அதாவது சுத்தம் செய்யாமல் விட்டால் உங்கள் முகத்தில் கரும்புள்ளி தோன்ற வாய்ப்பு அதிகம் உண்டு. ஆகவே அதுபோன்று கரும் புள்ளிகள் வராமல் இருக்க நல்ல தரமான ஃபேஷ் வாஷ் கொண்டு உங்கள் முக‌த்தை சரியான அளவில் நன்றாக கிளென்சிங் செய்ய வேண்டும். மேலும் இரவில், பென்ஸாயில் பெராக்சைடு 2.5% அளவு உள்ள கிரீம்களை தடவ வேண்டும். தேவைப் பட்டால் ஒரு நல்ல தகுதியான டெர்மட்டால்ஜிஸ்ட் அவர்களை அணுகி, ஏற்கனவே உருவாகியுள்ள கரும்புள்ளிகளை அகற்ற முயற்சிகள் மேற் கொள்ளலாம். 


முகத்தில் இதுபோன்ற கரும்புள்ளிகள் தோன்றாமல் இருக்க நீங்கள் எண்ணெயில் பொரித்த உணவுகளையும், எண்ணெய் பசை அதிகம் கொண்ட அழகியல் பொருள் களையும் நிச்சயம் தவிர்த்து, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட‍ அல்லது அழகியல் நிபுணர்கள் பரிந்துரைக்கும் அழகியல் பொருட்களை பயன்படுத்தி, உங்கள் சருமத்தின் அழகை மேம்படுத்திக் கொள்ளலாம். 


#இளம்பெண், #பெண், #சருமம், #முகம், #கரும்புள்ளி, #கிளென்சிங், #விதை2விருட்சம், #Young, #female, #skin, #face, #black_spot, #clenching, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham