தேம்பி தேம்பி அழுத நடிகை சாய் பல்லவி

தேம்பி தேம்பி அழுத நடிகை சாய் பல்லவிமுதல் அறிமுக திரைப்படமான பிரேமம் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி, தனுஷுடன் மாரி2 திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிகொண்டார். அந்த நடிகை சாய் பல்லவிதான், தான் தேம்பி தேம்பி அழுததாக தெரிவித்துள்ளார். 


உலகையே அச்சுறுத்தும் கொரோனா ஊரடங்கு என்பதால் மக்கள் யாரும் வெளியில் வர முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் அனைவ ரும் டிவி, திரைப்படங்கள், வெப் சீரிஸ் என வீட்டிலேயே தங்கள் நேரத்திற்கு கழித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அவர் சில்லுக்கருப்பட்டி படத்தை அவர் பார்த்துள்ளார். அந்த படத்தை பார்த்துவிட்டு அதிகம் எமோஷ்னல் ஆகி தேம்பி தேம்பி அழுதுவிட்டதாக கூறியுள்ளார். 


ஹலிதா ஷமீமுக்கு இமெயிலில் வாழ்த்து கூறிய சாய் பல்லவி. மேலும் படத்தை இயக்கிய ஹலிதா ஷமீமுக்கு இமெயிலில் வாழ்த்து கூறியுள் ளார் சாய் பல்லவி. அதில் அவர் கூறியிருப்பதாவது.. "ஹெலோ ஹலிதா.. படத்தை பார்த்துவிட்டு நானும் என் பெற்றோரும் அதிகம் எமோஷ்னல் ஆகி தேம்பி தேம்பி அழுதுவிட்டோம். உங்களுக்காக நான் அதிகம் சந்தோஷப்படுகிறேன். இப்படி ஒரு உணர்வை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி. நீங்க இது போன்ற பல ரத்தினங்களை உருவாக்க வேண்டும். எங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனை எப்போதும் உங்களுக்கு உண்டு" என கூறியுள்ளார் சாய் பல்லவி.


#சாய்_பல்லவி, #சில்லுக்_கருப்பட்டி, #Sai_pallavi, #Sillukarupatti, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,