ரூ.1 கோடி- கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தற்கு  திமுக கூட்டணி கட்சிகள் தீர்மானம்


ரூ.1 கோடி- கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தற்கு  திமுக கூட்டணி கட்சிகள் தீர்மானம்


மத்திய - மாநில அரசுகளின் கொரோனா வைரஸ் தொடர்பாக அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலார் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர். 


இதில் கொரோனா மற்றும் ஊரடங்கால் பரிதவிக்கும் பொதுமக்களுக்கு அத்தியா வசிய பொருட்கள் விநியோகம் மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பிரச்சனை கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதோடு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ள பொதுமக்களின் தேவைகள், மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து, அனைத்து கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 


கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உயிரிழப்பிற்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிவாரணம் போதாது, தடுப்பு பணியாளர்கள் உயிரிழந்தால் குடும்பத்திற்கு ரூ.1கோடி நிவாரணம் வழங்க வேண்டும், கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்  என்றும் 
கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றும்  திமுக வழங்கும் நிவாரண பொருட்களின் விநியோகத் திற்கு கோர்ட் விதித்த உத்தரவை பின்பற்ற வேண்டும். என்றும் ரேசன் கார்டுதாரர் களுக்கு ரூ. 5 ஆயிரம் அரசு வழங்க வேண்டும். உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


#Coronavirus, #DMK, #MKStalin, #திமுக, #கொரோனா #வைரஸ், #முக_ஸ்டாலின், #விதை2விருட்சம்,  #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seed2tree, #seedtotree,