இருமலும் தும்மலும் அபாயத்தின் அறிகுறி - அரிய மருத்துவ உண்மை
கோரோணா யுத்தம் என்ற உயிரியல் போரை இன்று உலகநாடுகள் சந்தித்து வருகின்றன• இதன்விளைவாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் உலகளவில் பலியாகிக் கொண்டிருக்கின்றன• இந்த நேரத்தில் இந்த இருமல் குறித்தும் தும்மல் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆகவே இந்த பதிவை தவறாமல் படித்து உணருங்கள்.
ஒரு மனிதர் தும்மும்போது அது சராசரியாக 80 கிலோ மீட்டர் அளவு அதன் வேகம் இருக்கும். அதுவே அவர் இருமினாலோ அது சராசரியாக 20 கிலோ மீட்டர் வேகம் தான் இருக்கும். ஒரு தும்மல் 3 மீட்டர் தூரம் வரையும் இருமல் 2 மீட்டர் தூரம் வரையும் காற்றில் பரவக்கூடியது. ஆகவே தான் நமது முன்னோர்கள், யாராவது இருமுவதைக் கண்டால் அவர்களிடமிருந்து 2 அடி தள்ளி நில். அதேபோல் தும்முவதைக் கண்டால் அவர்களிடமிருந்து தூர விலகி ஓடு என்று அந்தக் காலத்திலேயே சொல்லி இருக்கிறார்கள்.
ஆகவே நமது முன்னோர் சொல்படி நடந்து, இந்த கோரோணா என்ற கொடூர நோயிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள அரசு சொல்லும்வரை நாமெல்லாம் வெளியே அலையாமல் விழிப்புடன் வீட்டிலேயே இருந்து, ஒற்றுமையுடன் இருந்து கோரோணா வைரஸ் எனும் உயிரியல் போரை வென்று காட்ட வேண்டும்.
#கோரோணா, #கோரோணா_வைரஸ், #வைரஸ், #தும்மல், #தும்பல், #இருமல், #விதை2விருட்சம், #Corona, #corona_virus, #virus, #sneezing, #coughing, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,