நடிகை நயன்தாராவுடன் கைகோர்க்கும் மேலும் ஒரு நடிகர் 

நடிகை நயன்தாராவுடன் கைகோர்க்கும் மேலும் ஒரு நடிகர் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளிவந்த‌ ‘அவள்’ திரைப்படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக ஒரு திரில்லர் திரைப்த்தை இயக்கவிருக்கிறார். சூப்பர் ஸ்டார் திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்த நெற்றிக்கண் என்ற திரைப்படத்தின் பெயரையே தான் இயக்கும் திரைப்படத்திற்கும் வைத்துள்ளார். இத்திரைப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்க, முதன்முறையாக ர‌வுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைக்க உள்ளார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 


இந்நிலையில், இப்படத்தில் நடிகர் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஞ்சாதே, கோ, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இவரு க்கு, இப்படத்தின் கதாபாத்திரமும் பேசப்படும் என்கின்றனர் படக்குழுவினர். 80% படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக படப் பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


#Nayanthara, #Netrikann, #நயன்தாரா, #நெற்றிக்கண், #அஜ்மல், #அஞ்சாதே, #கோ, #இரவுக்கு_ஆயிரம்_கண்கள், #விக்னேஷ்_சிவன், #பிளைண்டு, #கொரியன், #ரீமேக், #விதை2விருட்சம், #Ajmal, #Anjadhe, #Ko, #Iravukku_Aayiram_Kangal, #Vignesh_Sivan, #Blind, #Korian, #Re_Make, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seedtotree, #70mmstoreyreal,