கலைஞர் - போலியோ ஒழித்த வரலாற்றில் 

கலைஞர் - போலியோ ஒழித்த வரலாற்றில்   அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972ஆம் ஆண்டு, முதலமைச்ச‍ர் கலைஞரின் தலைமையிலான‌ திமுக அமைச்சரவையில் இனமான பேராசிரியர், க. அன்பழகன் அவர்கள்தான் சமூக நலத்துறை அமைச்சர்.  அவர் அப்போது ஒரு கருத்தரங்கிற்காக வெளிநாடு சென்றிருந்த போது, போலியோவை ஒழிக்க சொட்டு மருந்து இருப்பதாக அறிந்து, அதனை இறக்குமதி செய்தார். ஆனால் அதனை சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மாநிலம் முழுவதும் எப்படிக் கொடுப்பது என்று விவாதித்த போது, முதலமைச்சர் கலைஞர் அவர்கள், இது ஊசி மருந்து இல்லை தானே, மற்றவர்கள் மூலமும் ஊற்றலாமே என்று கேட்டுவிட்டு ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் மூலமும் கொடுக்கலாம் என்றார். அப்படியும் தேவைப்பட்ட ஆள் பலம் கிடைக்க வில்லை. எனவே இதனை விவாதிக்க தலைமைசெயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர் எனப் பல அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடந்தது. அதில் கலைஞர்,  ஏன் ரோட்டரி கிளப் போன்ற என் ஜிஓக்களை பயன்படுத்தக் கூடாது? எனக் கேட்டார். அதற்கு தலைமைச் செயலாளர், மற்ற அரசுத்துறைப் பணியாளர்களை பயன்படுத்தலாம், ஆனால் தனியாரையும் பயன்படுத்தினால் அரசாங்க இயந்திரம் சரியில்லை, இவர்களுக்கு நிர்வகிக்கத் தெரியவில்லை என்ற அவப்பெயர் அரசுக்கு ஏற்படும் என்றார். ஆனால் கலைஞரோ அரசாங்கம் ஊனம் ஆகலாம் ஆனால் மக்கள் ஊனம் ஆகக்கூடாது என சொல்லிவிட்டு ரோட்டரி சங்க ஆட்களை அழைத்துப் பேசி, போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்தார். தமிழகம் முழுவதும் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. 1983ஆம் ஆண்டு தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில்தான் இந்தியா போலியோ இல்லாத நாடாக  அறிவிக்கப்பட்டது.  ரோட்டரி சங்கங்கள் தங்கள் தலைமையகத்துக்கு ஆண்டுதோறும் அறிக்கை அனுப்புவார்கள். அதில் தமிழக ரோட்டரி சங்கங்கள், தாங்கள் போலியோ ஒழிப்பில் ஈடுபடுவதையும் சேர்த்து அனுப்ப, மற்ற மாநில, நாடுகளிலும் ரோட்டரி சங்கங்கள் இந்த சேவையை தொடரத் துவங்கின. 1974 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு போலியோ நோயாளியைக் கண்டதில்லை. ஆனால் தெருக்களில், பள்ளியில் இந்த தலைமுறைக்கு முற்பட்டவ ர்களில் நிறைய பேர், போலியோவால் அவதிப்படுவதை அப்போது வாழ்ந்தவர்கள் கண்டிருக்கலாம். அதன்பிறகு போலியோ நோயினால் பாதிக்கப்பவர்கள் ஒருவர் கூட‌ இல்லாமல் இங்கே ஒழிந்ததற்கு அன்பழகனும், கலைஞரும் மூலக் காரணம். அன்பழகன், நான் இரண்டாம் இடத்தில் இருக்கிறேன் என்பார்கள். எனக்கும்கூட ஆரம்பத்தில் மனச்சங்கடம் அது குறித்து உண்டு. எனக்குத் தோன்றியது ஒரு பொறி தான். ஆனால் அதை செயலாக்கம் செய்தவர் கலைஞர். அப்படிப்பட்ட செயலூக்கம் உள்ளவரிடம் இரண்டாம் இடத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியே என்று குறிப்பிட்டிருக்கிறார்.


படித்ததில் பிடித்தது


#கலைஞர், #கருணாநிதி, #பேராசிரியர், #அன்பழகன், #போலியோ, #ரோட்டரி_சங்கம், #சொட்டு_மருந்து, #போலியோ_சொட்டு_மருந்து, #விதை2விருட்சம், #திமுக‌, #Kalaingar, #Karunanidhi, #Perasiriyar, #Anbalagan, #Polio, #Rotary_Club, #Drops, #Polio_Drops, #dmk, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,