தலைமுடி இளமையிலேயே நரைப்பதற்கான காரணங்கள்
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களின் முக அழகுக்கு மென்மேலும் அழகு சேர்ப்பது எதுவென்றால், அவர்களின் கருமையான தலைமுடிதான் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த அழகான கருமையான முடி நரைத்து வெள்ளை முடியாவது, வயது முதிர்ச்சி காரணமாக வந்தால் அது இயற்கையான மாற்றம். ஆனால் இளமையி லேயே நரைமுடி வந்தால் அதற்கான காரணத்தை நான் அறிந்து, அதற்கான தீர்வு கண்டு இளமையிலேயே முடி நரைக்காமல் எப்போதும் கருமையான முடி அழகுடன் இருக்கலாம்.
1) கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது, 2) செயற்கையான குளிர்பானங்களை அருந்துவது, 3) தலைக்கு கெமிக்கல் ஷாம்பூக்களை பயன்படுத்துவது, 4) போதுமான அளவு தூங்காமல் விழித்திருப்பது, 5) தலைமுடியை எப்போதும் அதீத ஈரப்பதத்துடன் வைத்திருப்பது,
இந்த ஐந்து காரணங்கள்தான் பெரும்பாலோருக்கு இளமையிலேயே முடி நரைத்து வயது முதிர்ந்த தோற்றத்தை கொடுத்து அவர்களின் தன்னம்பிக்கையை சீர்க்குலைக்கிறது.
#கூந்தல், #முடி, #கேசம், #தலைமுடி, #மயிர், #நரைமுடி, #நரைப்பது, #விதை2விருட்சம், #Hair, #Braid, #White_Hair, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,