வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது ஏன்?
வழக்கறிஞர்கள் எவரும் வழக்கறிஞர் தொழிலைத் தவிர வேறு தொழில்களில் ஈடுபட கூடாது என்று கூறுகின்றது. உ பிரிவு V-வழக்கறிஞர்கள் வேறு தொழில் களில் ஈடுபடக் கூடாது, (விதிகள் 47 முதல் 52 வரை) - (இந்திய வழக்கறிஞர்கள் மன்ற விதிகள்)
ஒரு தொழில் வழக்கறிஞர் தொழிலில் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்காது என்று மாநில மன்றம் கருதினால் அத்தொழிலில் ஒரு வழக்கறிஞர் இயங்கா கூட்டாளியாக ( sleeping partner) இருக்கலாம். வழக்கறிஞர் எந்த ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் செயலாளராகவோ இருக்கக் கூடாது.
ஒரு வழக்கறிஞர் தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் முழு நேர பணியாளராக இருக்கக்கூடாது. அவ்விதம் முழு நேர வேலையில் சேர்ந்து விட்டால் உடனடியாக அதனை மாநில மன்றத்திற்கு தெரிவித்து அவரது பெயரை வழக்கறிஞர் பெயர் பதிவு பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். அவர் அவ்வேலையில் நீடிக்கும் வரை அவரது பெயர் பட்டியலில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் .
ஒரு வழக்கறிஞருக்கு வாரிசுரிமைப் படி கிடைத்த குடும்ப வியாபாரத்தை அவர் ஏற்று நடத்தி வரலாம் . ஆனால் அவர் வியாபாரத்தில் நேரடியாக ஈடுபடக்கூடாது அவர் மற்ற பங்குதாரர்களுடன் ஒரு பங்குதாரராக மட்டுமே இருக்கலாம். ஆனால் ஒரு வழக்கறிஞர் சம்பளத்திற்காக பாராளுமன்ற சட்ட முன்வடிவுகளை மறு ஆய்வு செய்தல் ,சட்ட நூல்கள் எழுதுதல் ,சட்ட தேர்வுக்கு பயிற்சி கொடுத்தல் ,தேர்வு வினாத்தாள் தயாரித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடலாம் .
வழக்கறிஞர் தொழிலுக்கு முரண்படாத வழக்கறிஞர் தொழிலுக்கு கேடு விளைவிக்காத தொழில்களில் வழக்கறிஞர்கள் பகுதி நேர வேலையை ஏற்றுக் கொள்ளலாம் .
பகுதி நேர வேலை ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- நெஞ்சில் கே. கிருஷ்ணன்
#வழக்கறிஞர், #வழக்குறைஞர், #வக்கீல், #அட்வகேட், #லாயர், #சட்டம், #நீதிமன்றம், #சட்ட_வல்லுநர், #விதை2விருட்சம், #Advocate, #Lawyer, #Law, #Court, #Legal, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham