ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது - மக்க‍ள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது - மக்க‍ள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி



தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்ததாக சொல்லி காவல்துறையினரால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு,  கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக மரணம் அடைந்தனர். இந்த மரண சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தந்தை ஜெயராஜும் மகன் பென்னிக்சும் காவல் நிலையத்தில் வைத்து அதீத சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினரும் அவர்களின் நண்பர்கள் குற்றம்சாட்டினர். இச்சம்பவம் தமிழ்நாடு கடந்து, இந்தியா முழுவதும் தீயாக பரவி பெரும் சர்ச்சையாக கிளம்பியதோடு அல்லாமல் பலத்த எதிர்ப்புகளும் வலுத்தது. மேற்சொன்ன இருவரையும் சித்ரவதைக்கு உள்ளாக்கிய காவலர்கள் அத்தனை பேர்மீது கொலை வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை தர வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்தது.


இந்நிலையில் எஸ்.ஐ. ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் முதலில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பின் பொதுமக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புக்களால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். 


சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இவ்வழக்கை தானாக முன்வந்து கையிலெடுத்து இக்கொடூர சம்பவத்தின் உண்மைநிலையை அறிந்திட,  கோவில்பட்டி நீதி விசாரணை நீதிபதி பாரதிதாசன் அவர்களும் உத்திரவிட்டது.


நீதிபதி பாரதிதாசன் அவர்களின் விசாரணையின் போது. தனக்கு சாத்தான்குளம் காவல்நிலைய விவகாரம் தொடர்பான நீதி விசாரணைக்கு காலர்கள் தகுந்த ஒத்துழைப்பு தருவதில்லை. அதற்கான ஆதாரங்களை அவர்கள் அழித்துள்ளனர் என்று நீதிவிசாரணை நடத்திய நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளார்.


சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் அங்கு கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். 
அங்கு அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர்கள் கோவில்பட்டி கிளைச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் 22ம் தேதி உயிரிழந்துவிட்டதாக கோவில்பட்டி நீதி விசாரணை நீதிபதி பாரதிதாசன், உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இச்சம்பவத்தை நேரில் பார்த்த பெண் தலைமை காவலர் ரேவதி அளித்த சாட்சியத்தையும் ஒப்படைத்துள்ளார். 


இதனைத் தொடர்ந்து தந்தை, மகன் மரணம் குறித்து  சிபிசிஐடி உடனடியாக விசாரணை தொடங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தர விட்டது. அதன்படி இன்று சிபிசிஐடி பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தினர்.  


காவலில் உயிரிழப்பு என்றிருந்ததை பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக பதிவு செய்தது சிபிசிஐடி. சம்பவம் தொடர்பான 2 முதல் தகவல் அறிக்கைகளிலும் கொலை வழக்காக பதிவு. 6 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் நேற்றிரவு எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.  மற்றொரு எஸ்.ஐ பால கிருஷ்ணன், சொந்த ஊருக்கு சென்றிருப்பதாக கிடைத்த‍ தகவலை அடுத்து சிபி சிஐடி போலீசார் அங்கு சென்றனர். ஆனால் அவரது கைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ள‍தாக தெரிகிறது. மேலும் மேற்சொன்ன எஸ். ஐ. பாலகிருஷ்ணன் நீதிமன்றத்தில் சரண்டைய இருப்பதாகவும் சிபி சிஐடி காவலர்களிடம் அவரது உறவினர்கள் தெரிவித்திருப்பதாக தெரிகிறது. இருந்த போதிலும் இரவே அவரை கைது செய்ய வலைவீசி தேடிவருகிறார்கள். மேற்சொன்ன சம்பவத்தில் தொடர்பு உடைய மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.


சாத்தான்குளம் மக்க‍ள், இச்செய்தியை கேள்விப்பட்டவுடன் தெருக்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 


#Father_Son_Dies, #HC_Madurai_Bench, #தந்தை_மகன்_மரணம், #மதுரை_ஐகோர்ட், #சிபிசிஐடி, #ஜெயராஜ்_பெனிக்ஸ் #விதை2விருட்சம், #CBCID, #JusticeforJayarajAndFenix #JusticeForJeyarajAndBennicks #justiceforjayrajandfenix #JusticeForJeyarajAndFennix #Sathankulamcustodialdeath #SathankulamCase #SathankulamIssue #SathankulamPolice #SathankulamPoliceStation #sathankulamdeath #Kovilpatti #vidhai2virutcham #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,