ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவதன் காரணம் 

ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவதன் காரணம் 



இயற்கையில் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் சதை போடும். ஆண்கள் பொது வாக, இடுப்பிலிருந்து வயிறு வரை சதைபோட்டு, ஆப்பிள் வடிவ உடலை கொண்டிருப்பார்கள். இந்த அமைப்பே ஆண்களின் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அறியப்படுகிறது. அதுவே பெண்களுக்கு பேரிக்காய் வடிவ உடலமைப்பு இருக்கும்.
 
பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் சதை குறைவாகவும், இடுப்பிலி ருந்து கீழ் உடலில் அதிகமாகவும் இருக்கும். ஆனால், ஒரே அளவிலான உடல் கொழுப்புள்ள இருபாலருக்கும், வெவ்வேறு விதமான உடல்நல அபாயங்கள் வரலாம். உடல் பருமனான ஆண்களுக்கு அதிக ரத்த ஓட்டக் குறைவு(Systolic) மற்றும் ரத்தநாள விரிவு(Diastolic) ரத்த அழுத்தங்கள், அதிக அளவு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருக்கின்றன. இருந்தாலும் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை எளிதாக கரைத்துவிட முடியும் என்பதால் ஆண்கள் விரைவில் உடல் எடையை குறைத்து விடலாம். அதுவே இடுப்பு, தொடைப் பகுதிகளில் உள்ள கொழுப்பை கரைப்பது சற்று கடினம் என்பதாலும், பிரசவத்திற்குப் பின் தன் உடலை பராமரிப்பதில் பெண்களுக்கு உள்ள நேரப் பிரச்னையாலும், கர்ப்பத்தின்போது எடை கூடும் பெண்கள் எடை இழப்பது எளிதான விஷயம் இல்லை. சற்று கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.


#பருமன், #உடல்_பருமன், #வயிற்றுப்_பகுதி, #இடுப்பு, #தொடை, #கொழுப்பு, #ஆப்பிள், #பேரிக்காய், #சதை, #ரத்த_ஓட்டக்குறைவு, #Systolic, #ரத்தநாள_விரிவு, #Diastolic, #ரத்த_அழுத்தம், #எடை_கூடுவது, #பெண்கள், #ட்ரைகிளிசரைடுகள், #விதை2விருட்சம், #இதய_நோய், #நீரிழிவு, vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #blood_pressure, #weight, #diabetics,