மனம்திறக்கும் நடிகை - அந்த காதல் தொடர்ந்து இருந்தால்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா. இவரைப் பற்றி பல்வேறு திருமண வதந்திகள் பரவி வந்தன. அவற்றை அவர் மறுத்து வந்தார்.
அனுஷ்காவுக்கு இப்போதே 38 வயது ஆகிவிட்ட நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அனுஷ்கா, தான் ஒருவரை காதலித்து தோல்வி அடைந்ததாக கூறியுள் ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் 2008-ல் ஒருவரை காதலித்தேன். அது இனிமையான அனுபவமாக இருந்தது. அந்த காதல் எனக்கு விசேஷமானதாகவும் இருந்தது. ஆனால் அந்த காதல் தொடரவில்லை. ஒரு சூழ்நிலையால் பிரிந்து விட்டோம். நான் காதலித்தவர் யார் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை.
அந்த காதல் தொடர்ந்து இருந்தால் அவர் யார் என்பதை சொல்லி இருப்பேன். இப்போதும் அந்த காதலுக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். எனக்கு பிரபாசை 15 வருடங்களாக தெரியும். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்பதாலும், படத்தில் ஜோடியாக நடித்த தாலும் இணைத்து பேசுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை”. இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
#anushka, #anushka_shetty, #அனுஷ்கா, #அனுஷ்கா_ஷெட்டி, #ரஜினிகாந்த், #விஜய், #அஜித், #சூர்யா, #விதை2விருட்சம், #Rajinikanth, #Rajni, #Vijay, #Surya, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,