தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 67 பேர் - முதல்வர் பழனிச்சாமி பேட்டி

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 67 பேர் - முதல்வர் பழனிச்சாமி பேட்டிகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் , உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று ஏற்பட்டு மொத்தம் 67 ஆக உயர்ந்துள்ளது. ஆயினும் தமிழகத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் தலைமைச் செயலாளர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளில் 5 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். 


மேலும்  25 லட்சம் என்- 95 முகக் கவசங்கள் வாங்கவும்  உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வர வேண்டியுள்ளது. 1.5 கோடி முகச்கவசங்கள் வாங்குவதற்கு தமிழக அரசு ஆர்டர் செய்துள்ளது.


வீட்டு வாடகைதாரர்களின் பிரச்சினை குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும். இந்த கொரோனாவுக்கு ஒரே தடுப்பு மருந்து ஒன்றுதான் அது மக்கள் தங்களே தனிமைப் படுத்தக் கொள்வதுதான். கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்படும்.  பிற மாநிலங்களைக்காட்டிலும் தமிழகத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது. 


கொரோனா பரவலில் தமிழகம் 2வது கட்டத்திலிருந்து 3வது கட்டத்துக்கு செல்லாமல் தடுக்கும் பணியில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. கொரோனா விஷயத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அரசியல் செய்வது என்பது தேவையற்றது. 


இவ்வாறு அவர் கூறினார்.


#Coronavirus, #Coronavirus_Lockdown, #Edappadi_Pananiswami, #Chief_Minister, #CM, #கொரோனா_வைரஸ், #ஊரடங்கு, #உத்தரவு, #முதலமைச்சர், #எடப்பாடி_பழனிசாமி, #விதை2விருட்சம், #தமிழ்நாடு, #முதல்வர், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #Tamil_Nadu