பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
தற்போது தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி ஒரு பக்கம் நன்மைத் தருவதாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அது பெண்களுக்கு பெரும் ஆபத்தாகவும் இருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் மடிக்கணிணியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆண் பெண் என வேறுபாடின்றி இருபாலாரும் வீட்டில் இருந்தே வேலை செய்கிறார்கள். அப்படி செய்யும் போது பலர் படுக்கையறையில் மடிக்கணிணியை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும்போது சில ஹேக்கர்களால் அதாவது சைபர் கிரைம் குற்றவாளிகளால் அவர்களின் மடிக்கணிணி ஹேக் செய்யப்படும் ஆபத்து உள்ளது. அப்படி ஹேக் செய்துவிட்டால், அவர்களின் வெப் கேமராவை அவர்கள் பயன்படுத்தாமல் இருந்தாலும், ஹேக்கர்களால் உங்களின் மடிக்கணிணியில் உள்ள வெப் கேமராவை பயன்படுத்த வாய்ப்பு உண்டு. இதில் ஆண்களைவிட பெண்களே அதீத பாதிப்புக்களுக்கு உள்ளாகிறார்கள். படுக்கையறையில் தனிமையில்தான் இருக்கிறோமே என்று கருதி அவர்கள் அணிந்துள்ள ஆடை விலகினாலும் அதனை பொருட்படுத்தாமல் பணி செய்வார்கள். மேலும் கணவன் மனைவி இடையிலான தாம்பத்தியம் என்ற அந்த உன்னதத்தைக் கூட அந்த ஹேக்கர்கள் ஹேக் செய்து இணையத்தில் வெளியிடவும் வாய்ப்பு அதிகம்.
இந்த பேராபத்தில் இருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
வெப்கேமராவில் உங்களுக்கு நெருக்கமானவர்களோடு நீங்கள் உரையாடும்போது யாரோ மூன்றாவது நபர் ஹேக் செய்வதன் மூலம் கண்காணிக்க வாய்ப்புண்டு என்பதை கருத்தில் கொண்டு, சரியான ஆடைகளை அணிந்து கொண்டு பேச வேண்டும்.
வெப் கேமராவை நீங்கள் பயன்படுத்தாத சமயங்களில் உங்களின் நெற்றியை அலங்கரிக்கும் ஸ்டிக்கர் பொட்டுக்களில் பெரிய அளவிலான ஸ்டிக்கர் பொட்டை எடுத்து வெப்கேம் லென்ஸின் மேல் ஒட்டி விடுங்கள். அவ்வளவே. அடிக்கடி இந்த ஸ்டிக்கர் போட்டு அந்த லென்ஸின் மேல் இருக்கிறதா என்பது கண்காணித்து வாருங்கள், அந்த ஸ்டிக்கர் பொட்டு கீழே விழுந்து விட்டால், வேறு ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிவிடுங்கள்.
மேலும் நீங்கள் செல்போனில் வீடியோ கால் பேசுபவராக இருந்தாலும், மூடி வைத்த செல்கவரை வாங்கி பயன்படுத்துங்கள்.
இதன்மூலம் உங்கள் வெப்கேமையோ அல்லது உங்களின் செல்லில் உள்ள கேமராவையோ யாராவது ஹேக் செய்து பார்க்க நேர்ந்தாலும் அவர்களுக்கு உங்கள் உருவம் தெரியாது. இதன்மூலம் உங்களை நீங்களே தற்காத்துக் கொள்கிறீர்கள்.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி - 9884193081
#சைபர்_கிரைம், #குற்றவாளிகள், #வெப்கேம், #செல்போன்_கேமரா, #கேமரா, #ஸ்டிக்கர்_பொட்டு, #மடிக்கணிணி, #ஹேக், #ஹேக்கர்ஸ், #விதை2விருட்சம், #Cyber_crime, #criminals, #webcam, #cellphone_camera, #camera, #sticker_pottu, #laptop, #hack, #hackers, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,