இனி சூர்யாவுக்கு ஜோடி நான்தான் - மார்தட்டும் நடிகை

இனி சூர்யாவுக்கு ஜோடி நான்தான் - மார்தட்டும் நடிகைவேல், ஆறு, சிங்கம் வரிசைகள் அனைத்தும் சூர்யா- ஹரி காம்போவில் உருவான திரைப்படங்கள் இவையாவும் வசூல்ரீதியாக‌ சூப்பர் ஹிட்டானவை. மீண்டும் இந்த காம்போவில் அருவா என்ற புதிய படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். சூர்யா படத்திற்கு முதன்முறையாக இசையமைக்க உள்ளார் டி.இமான் 


வேல், மாற்றான் திரைப்படங்களை தொடர்ந்து இப்படத்திலும் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என சொல்லப்படுகிறது. 


இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகிக ளிடம் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில் இப்படத்தில் சூர்யா வுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க உள்ளதாக அதிகாரப் பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. 


நடிகை ராசி கண்ணா டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் அடுத்ததாக நடிக்கும் படங்கள் என்ன என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராசி கண்ணா, அரண்மனை 3 மற்றும் ஹரி இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். மேலும் 2 தெலுங்கு படங்களில் நடிக்கிறேன் என கூறினார்.


#நடிகை, #ராசி_கண்ணா, #சூர்யா, #விதை2விருட்சம், #அருவா, #Actress, #Rashi_Khanna, #Surya, #Seed2tree, #Aruva, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #70mmstoryreel,