நடிகை அனுஷ்கா - 30 இலட்சத்தை தாண்டியது

நடிகை அனுஷ்கா - 30 இலட்சத்தை தாண்டியதுதமிழ், தெலுங்கு இரண்டு மொழித் திரையுலகிலும் முன்னணி நடிகையாக இதுநாள் வரை இருந்து வருபவரான‌ நடிகை அனுஷ்கா நடித்துள்ள சைலன்ஸ் (நிசப்தம்) என்ற பெயர் கொண்ட  திரைப்படம் வெளியாகும் சமயத்தில் இந்த கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு விட்டதால், இந்த கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகே  திரையில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. 


இந்நிலையில் நடிகை அனுஷ்காவை இன்ஸ்டாகிராமில் பின் தொடருவோர் எண்ணிக்கை 3 மில்லியன் அதாவது 30 லட்சத்தை தாண்டியது. இதற்காக அனுஷ்கா  நன்றி தெரிவித்து, வெளியிட்ட பதிவில், உங்களின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவுக்கு எப்போதும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.  நீங்கள் அனைவரும் பொறுப்புடன் வீட்டில் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார். விரைவில் கொரோனா ஒழித்து, பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என்று தெரிவித்துள்ளார். 


அனுஷ்கா, Anushka, சைலன்ஸ், நிசப்தம், விதை2விருட்சம், இன்ஸ்டாகிராம், License, Nisaptham, vidhai2virutcham, instagram, vidhaitovirutcham, seed2tree, seedtotree,