நடிகை சாய் பல்லவி ட்விட்டரில் உருக்கம்

நடிகை சாய் பல்லவி ட்விட்டரில் உருக்கம்க‌டந்தாண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 14 வரை இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது தற்போது மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. 


இதனால் கல்லூரிகள், பள்ளிகள் அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக \ மக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்களும், காவல் துறையினரும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் சேவையை பலரும் பாராட்டுகின்றனர். 


இந்நிலையில், நடிகை சாய்பல்லவி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த கஷ்டமான காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் அனைத்து வழிகளிலும் உதவியாக இருப்போம். தன்னலமில்லாமல் சேவையாற்றி வரும் மருத்துவ, சுகாதார பணியாளர்கள் காவல்துறை அண்ணன்கள், அக்காள்களுக்கு என்றைக்கும் கடமைப்பட்டு உள்ளோம்’ என்று உருக்கத்துடன்  கூறியுள்ளார்.


#Saipallavi, #corona, #சாய்பல்லவி, #கொரோனா, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #Covid19, 70mmstoryreel,