வெட்கமாக இருக்கிறது - நடிகை காயத்ரி ஆவேசம்
சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் அதே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அண்ணா நகரைச் சேர்ந்த சிலர் கடுமை யாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. அந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட 21 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இச்சம்பவத்தை அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் எனப் பலரும் வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகை காயத்ரி தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: "நம் உயிரை காக்கும் மக்களுக்கு இது தான் நாம் கொடுக்கும் மரியாதை என்றால் ஒரு சமூகமாக நாம் தோற்று விட்டோம். எனக்கு வெட்கமாக இருக்கிறது. நமக்காக டாக்டர் சைமன், டாக்டர் பிரதீப் போன்றோர் செய்த தியாகங்களை நினைவு கூர்வோம். அவர்கள் பாகுபாடு பார்க்கவில்லை. நாமும் பார்க்கக் கூடாது. இது போன்ற ஒரு கடினமான சூழலில் மருத்துவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க முடிவுசெய்தால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்" இவ்வாறு காயத்ரி ஆவேசமாக தெரிவித்தார்.
#காயத்ரி, #Gayathrie, #கொரோனா, #கோவித்19, #விதை2விருட்சம், #Corona, #Covid19, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,