சூர்யாவுடன் நான் - உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்

உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன் - சூர்யாவுடன் நான்நடிகை ரம்யா பாண்டியன் நடித்து, ராஜூ முருகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான‌ ஜோக்கர் திரைப்படம்  தேசியவிருது பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி நடித்த 'ஆண் தேவதைய என்ற திரைப்பட்த்தில் நடித்தார். அதன்பிறகு இவர், கடந்தாண்டு தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட்டினை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதன்காரணமாக இவரது புகைப் படங்கள் அத்தனையும் வைரலானது. அதன்பின் பல்வேறு பட வாய்ப்புகள் வந்தும், தொடர்ந்து. குக் வித் கோமாளி என்ற‌ தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சி மூலமாக  அவருக்கு தனி ரசிகர் படையே உருவானது.


சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன், சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்திலும், சி.வி.குமார் தயாரிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகப் கூறினார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.


#Ramya_Pandian, #Suriya, #ரம்யா_பாண்டியன், #சூர்யா, #ஆண்_தேவதை, #ஜோக்கர், #விதை2விருட்சம், #Aan_Devadhai, #Joker, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,