கொரோனா எதிரொலி - நடிகை அனுஷ்கா வேதனை

கொரோனா எதிரொலி - நடிகை அனுஷ்கா வேதனைஇன்று உலக நாடுகளை அச்சுறுத்தி, தனது கோரத்தாண்டவத்தை ஆடிவருவது கண்ணுக்கு தெரியாத (நுண்ணுயிரி) கொரோனா என்ற வைரஸ்தான். இந்த கொரோனா தொற்றின் பிறப்பிடம் சீனாதான். அங்கு  உருவான கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலகம் முழுக்க பரவி பல உயிர்களை பலிவாங்கி வருகிறது. 


இந்தியாவிலும் இந்த கொடிய வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.


இந்நிலையில், நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா குறித்து வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்டதை எல்லாம் மறந்து, முற்றிலும் புதிதாக கற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் இதுவரை செய்ய முடியாது என்று நினைத்ததை எல்லாம் இப்பொழுது செய்துகொண்டிருக்கிறோம். நம்மால் முடிந்ததை இப்பொழுது செய்ய முடியாத நிலை.


நாம் காலத்தால் பிரிந்திருந்தாலும், புவியியல் ரீதியான தடையால் நாம் ஒன்றாக நிற்கிறோம். நமது பாதுகாப்புக்காக பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும்போது எல்லோருக்கும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. சின்னதோ, பெரியதோ அந்த கதாபாத்திரத்தை மனிதனாக மனிதத்துடன் செய்வோம்'' என்று தெரிவித்துள்ளார். 


#Anushka_shetty, #corona_virus, #அனுஷ்கா, #கொரோனா, #Anushka, #corona, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #70mmstoryreel,