மரண‌ பீதியில் மக்க‍ள் - அலறித்துடிக்கும் அமெரிக்கா 

மரண‌ பீதியில் மக்க‍ள் - அலறித்துடிக்கும் அமெரிக்கா


 


உலகத்தில் உள்ள மொத்த நாடுகளில் சுமார் 210 நாடுகளில் கொரோனா எனும் கொடூர வைரஸ் பரவி, மனித உயிரிழப்புகளையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தி வருவது. எதற்கெடுத்தாலும் தோள் உயர்த்தும் ஆளாளப்பட்ட அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்த கொரோனா வைரஸால் அலறிக் கொண்டிருக்கின்றன‌. 


முதன்முதலில் சீனாவில் கண்டு அறிய‌ப்பட்ட இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. நாளு க்குநாள் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து, மற்றும் குணப்படுத்தக்கூடிய மருந்துகளை கண்டறிய மருத்துவ‌ விஞ்ஞானிகள் தீவிரமாக‌ முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால் தற்போது வரை அந்த முயற்சிகளில் எள்ளள‍வு கூட முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பது வேதனைக்குரியதே.
 
இன்றைய தேதி வரை கணக்கிட்டால் கொரோனாவின் கோரப்படியில் சிக்கித் தவிக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இங்கு தான் பலி எண்ணிக்கை அதிகமாக‌ உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா வில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 223 பேர் ஆகும். தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 636 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 6 லட்சத்து 48 ஆயிரத்து 242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்க ளில் 13 ஆயிரத்து 556 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.


கொரோனாவுக்கு பலியானவர்கள் 40 ஆயிரத்தை கடந்துள்ளதால் அமெரிக்க அரசு செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கிறது. மக்கள் அதீத பீதி அடைந்துள்ளனர்.


#Coronavirus, #கொரோனா_வைரஸ், #அமெரிக்கா, #Corona, #virus, #கொரோனா, #வைரஸ், #கோவிட்19, #விதை2விருட்சம், #Covid_19, #vidhai2virutcham, #America, #USA, #United_States_Of_America, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,