கொய்யா இலை கொதித்த நீரால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால்
பொதுவாக கொய்யா பழங்களைச் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான அனைத்து எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதோடு, தேவையில்லாத நோய்கள் ஏற்படுவதும் தொடக்க நிலையிலேயே தடுக்கப்பட்டு உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை .
பழங்களைப் பற்றி தெரிந்து கொண்டளவு கொய்யா இலையின் பயன்பாடு அவ்வளவாக மக்களுக்கு தெரிவதில்லை. அந்த வகையில் கொய்யா இலையின் பயன்பாடுகளில் ஒன்றினை இங்கு காண்போம்.
புதிய கொய்யா இலையை எடுத்து சுத்தமான நீரில் சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பின் அந்நீரைக் கொண்ட்டு வாய் கொப்பளித்து வந்தால் பற்களில் உண்டான கறைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து பற்கள் பளிச்சிடும். மேலும் கொய்யா பழத்தை தினமும் உண்டு வந்தாலும் பற்களில் உள்ள கறைகள் மற்றும் அழுக்குகள் போய் பற்கள் வெண்மையாக பளிச்சிடுமாம்.
#கொய்யா, #கொய்யா_இலை, #கொய்யா_பழம், #வாய், #கொப்பளி, #கறை, #பல், #பற்கள், #விதை2விருட்சம், #Guava, #guava_leaf, #guava_fruit, #mouth, #blister, #stain, #tooth, #teeth, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,