நடிகை அமிர்தா ஐயர் -லேட்டஸ்ட் அப்டேட்


நடிகை அமிர்தா ஐயர் -லேட்டஸ்ட் அப்டேட்


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தவர்தான் நடிகை அமிர்தா ஐயர். இவர் 2016 ஆம் ஆண்டு போக்கிரி ராஜா திரைப்படத்தில் அறிமுகமாகி, தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்தபோதும், தமிழில் அவ்வளவாக பிரபலம் அடையாமல் இருந்தார். இந்நிலையில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்ததன் மூலம் இவர் புகழ் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனால். தற்போது பிக்பாஸ் பிரபலம் கவின் உடன் ஜோடியாக லிப்ட் என்ற திரைப்படத்தில் நடிக்க விருக்கிறார் என்பது தெரிந்த செய்திதான். 


தெரியாத செய்தி என்னவென்றால் நடிகை அமிர்தா ஐயருக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் அதுவும்  முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க வைக்க, புதிய இயக்குநர் ஒருவர் அவரை சந்தித்து கதையை சொல்லியுள்ளதாகவும், அந்த கதை, நடிகை அமிர்தா ஐயருக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன• 


இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க‌ ஒரு பிரபல நடிகர் முதலில் சரி என்றபோது அதன் பிறகு ஏதோ ஒரு காரணத்திற்காக விலகிவிட்டதாகவும் தெரிகிறது. விரைவில் வேறு ஒரு பிரபல கதாநாயகனுடன் நடிகை அமிர்தா இணைந்து அதுவும் இரட்டை வேடத்தில் அவரது நடிப்பாற்றலை எதிர்பார்க்கலாம். 


நடிகை, அமிர்தா ஐயர், இரட்டை வேடம், பிகில், விதை2விருட்சம், Actress, Amritha Aiyer, Amritha, Dual Role, Bigil, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,