CAA-வுக்கு எதிராக ஐநா போர்கொடி - உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்தியில் ஆளும் பா.ஜ•க•அரசு,சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்ற குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆவேச எதிருப்புக்களுக்கிடையே, தனக்கே உரிய மிருக பலத்துடன் நாடாளுமன்றத்தில் தாக்கல் அது வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர்.சி. (CAA, NPR, NRC), போன்றவற்றிற்கு எதிராக ஆங்காங்கே இஸ்லாமியர்களும் இந்துக்களும் இந்தியர்களாக ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இருந்தபோதிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் மேற்சொன்ன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டனர்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்ப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் இன்று உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய முன்வந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில், இந்தியாவின் உள்விவகாரங்களில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தலையிட முடியாது என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது; சி.ஏ.ஏ. விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாக ஜெனிவா பிரதிநிதி தகவல் தெரிவித்திருந்தார். சி.ஏ.ஏ. விவகாரம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். என்ன மாதிரியான சட்டங்களை நிறைவேற்றுவது என்பது இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்டது. இந்த விவகாரத்தில் எந்த ஒரு அன்னிய சக்தியும் தலையிட முடியாது. சி.ஏ.ஏ. என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு போன்ற சுயேட்சையாக அமைப்புகள் மீது இந்தியாவுக்கு எப்போதும் மரியாதை உண்டு. இவ்வாறு ரவீஷ்குமார் கூறினார்.
#ஐநா. #மனித_உரிமைகள்_அமைப்பு #சுயேட்சை #உச்சநீதிமன்றம் #சிஏஏ #என்ஆர்சி #என்பிஆர் #குடியுரிமை_சட்ட_திருத்த_மசோதா #விதை2விருட்சம் #விதைவிருட்சம் #UN #Human_Rights #Independent #Supreme_Court #CAA #NRC #NPR #Citizen_Amendment_Act #vidhai2virutcham #vidhaitovirutcham #seedtotree #seed2tree,