நடிகை கடும் எச்சரிக்கை - கொரோனாவை இப்போது கட்டுப்படுத்தாவிட்டால்...

நடிகை கடும் எச்சரிக்கை - கொரோனாவை இப்போது கட்டுப்படுத்தாவிட்டால்...“நாம் இயற்கைக்கு விரோதமாக வாழ்கிறோம். அதனால்தான் கொரோனா வைரஸ் போன்றவை வருகின்றன. இப்போது நாம் போலீஸ், டாக்டர் ஆகியோர் சொல்வதை கண்டிப்பாக கேட்க வேண்டும். அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று நடக்க வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இப்போதுள்ள நிலைமையை யோசித்து பார்த்தால் எவ்வளவு அவசியம் என்று புரியும். வீட்டில் இருந்து புத்தகங்கள் படியுங்கள். அல்லது சினிமா பாருங்கள். 


எல்லோரும் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் ஒழுங்காக இருக்க வேண்டும். மற்றவர்கள் கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். கொரோனா வைரசை இப்போது கட்டுப்படுத்தாவிட்டால் மரணங்கள் எண்ணிக்கை அதிகமாகிவிடும். எனவே ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்”. இவ்வாறு சார்மி கூறியுள்ளார்


கொரோனா விழிப்புணர்வு கருத்துகளை பல நடிகர்கள் நடிகைகள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை சார்மியும் தனது சமூக வலைத்தள பக்க‌த்தில் இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறார். 


#நடிகை, #லாடம், #சார்மி, #கோரோனா, #கொரோனா_வைரஸ், #Charmi, #Actress, #Ladam, #Corona, #Corona_Virus, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #vidhaivirutcham.page